About Chetpet
About Chetpet

சேத்துப்பட்டு வட்டம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வருவாய் வட்டம், ஆரணி வட்டத்தின் தென்பகுதியில், மே 2012ல் நிறுவப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகம் சேத்துப்பட்டியில் செயல்படுகிறது மற்றும் இது 76 வருவாய் கிராமங்களை கொண்டுள்ளது.
சேத்துப்பட்டு வட்டத்தில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேத்துப்பட்டு பேரூராட்சி உள்ளன. இவ்வட்டம் போளூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதி என்பவற்றில் அடங்குகிறது.
சேத்துப்பட்டு வட்டத்தின் எல்லைகள்:
– வடக்கில்: ஆரணி வட்டம்
– கிழக்கில்: வந்தவாசி வட்டம்
– தெற்கில்: விழுப்புரம் மாவட்டம்
– மேற்கில்: போளூர் வட்டம்
– தென்மேற்கில்: கலசப்பாக்கம் வட்டம்
– கீழ்பெண்ணாத்தூர் வட்டம்
சேத்துப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத் தலைமையிடத்திலிருந்து 46 கி.மீ மற்றும் சென்னையிலிருந்து 137 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும், கலசப்பக்கம் மற்றும் சேத்துப்பட்டு இடையிலான தொலைவு 38 கி.மீ ஆகும்.